இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
166
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
எனது துயரமான எண்ணங்கள் தங்களது பெயர் களைக் கேட்டுக் கேட்டு என்னைத் துன்புறுத்துகின்றன.
-ப.ப
★★★★
திருக்கோயிலின் உள்கதவைத் திறந்திடு, விளக்கினை ஏற்றிடு, அங்கு நம் இறைவனின் முன்னிலையில் அமைதியுடன் ஒன்று கூடுவோம்.
-க.கொ
★★★★
வாழ்வு என்பது முடிவில்லாதது என்பதை அறிந்து கொள்ள மீண்டும் மீண்டும் நான் இறப்பேன்.
-ப.ப
★★★★
தேய்ந்து வரும் இரவு என் வாயில்முன் தயங்கி நிற்கிறது. பாடல்களைப் பாடி என்னிடம் அவள் விடை பெறட்டும்.
-க.கொ
★★★★
நாள் முடிவில் உன் முன் நான் நிற்கும் போது, நீ என் உடம்பிலுள்ள தழும்புகளைக் காணலாம். நான் காயப்பட்டிருக்கிறேன் என்பதையும், அவை குணமாகி வருகிறதென்பதையும் நீ தெரிந்து கொள்வாய்.
-க.கொ
★★★★