த. கோவேந்தன்
167
என் தலைவ உன் விண்மீன்களிலிருந்து இறங்கி வருகிற பண்ணிசைப்புகளில் நெஞ்சத்தை எனது வாழ்க்கைத் தந்திகளில் பொழிந்து விடு.
-க.கொ
என்றாவது ஒரு நாள் வேறொரு உலகத்தின் விடிவெள்ளியில் உனக்குப் பாடுவேன்; நிலத்தின் வெளிச்சத்தில் மனித நேயத்தில் உன்னை முன்பே நான் பார்த்திருக்கிறேன்.
-ப.ப
★★★★
குயிலுக்குத் தன்பாட்டுத்தான் பொருத்தமாகும். குயில் கிளியைப்போல எதிரொலிப்பது பொருந்தாது.
****
நான் விடை பெற்று செல்லுமுன், திரும்பத் திரும்ப வருகிற சொல்லின் மேல் கவனம் செலுத்தி, அந்த இசையை முற்றிலுமாக நிறைவு செய்வேனாக. உன் முகத்தைக் காண விளக்கைச் சுடர்விடச் செய்வேனாக, உனக்கு முடிசூட்டிட மாலை தொடுப்பேனாக.
-க.கொ
★★★★
நேற்றைய இரவின் புயல் தனது பொன்மயமான அமைதியினால் காலைப் பொழுதிற்கு முடிசூட்டுகிறது.
-ப.ப
★★★★
தனக்குள்ளே யாவற்றையும் அடக்கிக் கொள்ளும் நிலையான உண்மை அங்கே இருக்கிறது.
-ஆ
★★★★