த. கோவேந்தன்
15
உன் கண்ணில் படுவதற்காகத் துடித்துக் கொண்டிருக்கும் ஒளி வீசும் மலர்களைக் கடந்து செல்வாய். - கா.ப
★★★★
இருளின் நுழைவாயில் முன்னர் பகல் தன் யாழினை மீட்டுகிறது. மறைவதாயிருந்தாலும் முதலில் தோன்று வதைக் கண்டே பகல் மனநிறைவு அடைகிறது.
- மின்
★★★★
ஒவ்வொரு விதையிலும் உயிர்த்தன்மை இருப்பது போல, இறைவன் என்னுள் இருக்கிறான், உன்னிடமும் இருக்கிறான்.
- க.பா
★★★★
அவள் மட்டும் என்னுடையவளாய் இருந்து விட்டால், இவ் உலகின் மிகச் சிறிய மூலையிலும் கூட நான் மனநிறைவுடன் இருப்பேன்.
- கா.ப
★★★★
என் விருப்புகள் பித்தானவை.
இறைவா, உனது பாடல்கள் இசைக்கப்படும் பொழுது, அவை உரக்கக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றன. உனது பாடங்களைக் கேட்க மட்டும் என்னை அனுமதிப்பாயாக. - ப.ப
★★★★
பலர் பேருலகமாகக் காண்பதை என்னிடமுள்ள இந்த ஒன்றே நன்கு அறிந்து வைத்துள்ளது.
- படை
★★★★