பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ந்த அளவில் உலகம் தாலாட்டப் படுகிறதோ, அந்த இசை எது?

-ப.ப

ற்ற நாள்களிலிருந்து என் வாழ்க்கையில் மிதந்து வரும் முகில்கள் மழை பொழிவதற்காகவோ, புயல் வீசுவதற்காகவோ வரவில்லை; மறையும் படுஞாயிற்றுக்கு நிறம் கொடுக்கவே அவை வருகின்றன.

-ப.ப

ன் முடிவான தீர்மானத்தைக் கூறவே வாய்மை என்னிடம் வருவதாகத் தெரிகிறது. அந்த முடிவான தீர்மானமே மற்றொன்று தோன்ற வழி செய்கிறது.

-ப.ப

ந்த மண் பாண்டத்திகுள் நிலைப்பேறுடையது குரல் கொடுக்கிறது; வேனிற்காலம் நெருங்கத் துடிக்கிறது.

-க.பா

ந்த உலகத்தை என் கண்களாலும், இதர அங்கங்களினாலும் முத்தமிட்டிருக்கிறேன், எண்ணற்ற மடிப்புகளாக என் நெஞ்சத்திற்குள் சுருட்டி வைத்திருக்கிறேன். உலகமும் எனது வாழ்க்கையும் ஒன்றாக இணையும் வரை அதன் பகல்களையும் இரவுகளையும் வெள்ளம் போல் சூழ்ந்திருக்கிறேன்.

-க.கொ