இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
169
கண்ணீர்த் துளிகளில் விதைப்பதற்காகத் தோல்வி களைத் தொகுக்கிற அந்தக் காதலுக்காக நான் காத்திருக்கிறேன்.
-நா
★★★★
வாழ்க்கையை நான் விரும்புகிறேன் ஏனெனில் என்னுடன் பிணைந்துள்ள விண்ணின் ஒளியை நான் விரும்புகிறேன்.
-க.கொ
★★★★
எங்கு ஒளி இருளைத் தாக்கிப் பகலாக மாற்றுகிறதோ, அங்கு உன்னை நான் கண்ணுற்றிருக்கிறேன்.
-எ
★★★★
வெறுமையாகவும் அமைதியாகவும் இருக்கிற வழிகள் என் வாழ்க்கையில் உள்ளன. எனது விரைவான நாள்கள் ஒளியும் காற்றும் கொண்டிருந்த வெட்ட வெளி இடங்கள் அவை.
-ப.ப
★★★★
எவரோ ஒருவர் அன்பாகிற மலரை என் நெஞ்சத்தில் கமுக்கமாக விட்டுச் சென்றிருக்கிறார்.
-எ
★★★★