இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
171
துயரத்தின் சாயல் ஒலிக்கும் பாடல்களையும் எடுத்து வந்து என்னை நிலைகுலையச் செய்கிறது.
-நா
★★★★
என்னருகில் ஒரு கண நேரம் தான் நீ நின்றிருந்தாய். படைக்கப்பட்ட பொழுதே ஆழங் காணமுடியாத ஒரு முகத்தை உள்ளடக்கிய பெண்ணாக என்னை வருடினாய்.
-க.கொ
★★★★
என் நெஞ்சமே, அலை உயர எழும்பி நிற்கிறது, காற்று வீசுகிறது, உன் விருப்பத்திற்கேற்ப, படகும் கூத்திடுகின்றது.
-நா
★★★★
உனதோ, வழக்கமான புழுதியில் அமர்ந்திருக்கும் விண்ணகம். எனக்காக நீ அங்கே காத்திருக்கிறாய். யாவருக்காகவும்தான் நீ அங்கே காத்திருக்கிறாய்.
-க.கொ
★★★★
உனது சேமிப்பைக் கரையில் நிறுத்தி வைத்திடு. பின்னர் வரையரையில்லாத வெளிச்சத்தைத் தேடி ஆழங் காண முடியாத இருட்டின் மேல் பயணம் செய்வாய்.
-நா
★★★★
ஒளியின் வாழ்த்து கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கிறது.
-எ
★★★★