172
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
காற்றையும், முகிலையும் நான் தொடர்ந்து செல்வேன். குன்றுகளுக்குப் பின்புறம் எங்குப் பகல் தலை காட்டுகிறதோ, அங்கே நான் விண்மீன்களைப் பின்பற்றிச் செல்வேன், தாங்கள் நடந்து செல்கையில் தங்கள் நாள்களை ஒரு மாலையாக்கி அதில் 'நான் விரும்புகிறேன்' என்ற சொற்களைப் பாடலாக்குகிற காதலர்களைப் பின் பற்றிச் செல்வேன்.
-நா
★★★★
இன்னிளவேனிற் தென்றல் காற்று உன் ஆசையை ஒட்டுக் கேட்டிருக்கிறது. பிறவி எடுத்ததன் பயனை நீ அடையுமுன்னர் பகல் முடிவடைந்து விடாது.
-க.கொ
★★★★
மரங்கள் கரைமேல் மங்கலாகப் படர்ந்திருக்கின்றன. தரையோ கடந்த காலத்திற்கே தான் உரித்தானது போல தோற்றமளிக்கிறது.
-நா
★★★★
உன்னைப் பிணித்திருக்கும் தளைகள் இற்றுப் போகும். மொட்டு மலராக முகிழ்ந்துவிடும். நிறை வாழ்வு வாழ்ந்து வாழ்ந்து நீ இறக்கும் பொழுது கூட வேனிற் காலம் நிலைத்து நிற்கும்.
-க.கொ
★★★★
மழை பொழியாமல் அமைதியாக இருக்கிற கோடைக் கால முகில்கள் போல் ஒரு கமுக்கமும் புதைந்திருக்க வேண்டும் என்னுள்ளே.செல்லுமிடத்-