174
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
என் பண் இசையின் அலைகள் உன் அடிகளைக் கழுவுகின்றன. ஆனால் அவற்றை அடைவது எப்படி என்பது தான் எனக்குத் தெரியவில்லை.
-க.கொ
★★★★
நடுவில் புகுந்து அங்கிருந்து வாழ்க்கையாகிற கிளை பரப்பும் மரத்திற்குக் கண்ணுக்குத் தெரியாத ஊட்டமளித்து மலர்களும், கனிகளும் தோன்றச் செய்கிற அன்பை எனக்கு அளித்திடுவாய்.
-க.கொ
★★★★
ஒப்புயர்வற்ற ஆவியில் எத்தனை வியப்பான அமைதி உள்ளது என்று கண்டிரு. தகுதியுள்ளவனுக்கே நுகர்வின்பம் கிடைக்கும்.
-க.பா
★★★★
சோர்வுற்ற காலப் போக்கில் நீ ஈட்டிய செல்வத்தைக் கண்டு களித்தது போதும். எல்லாவற்றையும் கை கழுவி விட்டோம் என்ற பாழ்பட்ட வெற்றிக் களிப்பைத் தவிர எதுவுமே மிஞ்சி நிற்காதபடி அத்தனையையும் செலவிட்டு விடு.
-நா
நமது வாழ்க்கை இறைவனின் திருவருள் கொடை யால் நிறைக்கப்பட்டிருக்கிறது.
-ஆ
★★★★