இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
175
என் வாழ்க்கையின் பெருமகிழ்ச்சியான நாள்களில் நீ எனக்கு பாட்டிசைத்தாய் நான் உனக்கு அவ்வாறு பாட மறந்து விட்டேன்.
-க.கொ
★★★★
காதல் என்னும் மணிக் கயிற்றால் பிணைக்கப்பட்டு மகிழ்ச்சி என்னும் பெருங்கடலில் இங்கும் அங்குமாய் அசைக்கப்படுகிறேன்.
வல்லமை மிக்க ஓசையொன்று இசையாக வெளிப்படுகிறது.
-க.பா
★★★★
என் இளமைப் பருவத்தில் ஆழ்ந்த மகிழ்ச்சியாக என் உள்ளத்தில் உறைந்திருந்தாய். அந்த நிலையில் நான் திளைத்திருந்த பொழுது, அந்த மகிழ்ச்சி திடீரென மறைந்து போனது.
-க.கொ
★★★★
உலகம் தன் கடமைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறது; தவறுகளும் புரிந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் தங்கள் காதலிகளை அறிந்து கொள்ளும் காதலர்கள் சிலரே இருக்கிறார்கள்.
-க.பா
★★★★
ஆழம் காண முடியாத கடலின் நெஞ்சத்திலிருந்து பொன்மயமான குரலொன்று பிறக்கிறது.
-எ
★★★★