16
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
என் அன்புக்குரியவன் எனது நெஞ்சத்திலேயே வாழ்கிறான். அதனால் தான் அவனை நான் எங்கும் காண்கிறேன். - கி.ஆ
★★★★
கடலருகில் தோட்டத்தில், நெருங்கி வரும் கோடைக் காலத்தில் அன்பு மலருமாக.
- கா.பா
★★★★
பேரண்டத்தின் அடி ஆழத்திலிருந்து கிளம்பிடும் எதிரொலி நம்மிடம் அன்பு செலுத்துபவனின் முகத்திலிருந்து நமது நெஞ்சத்தில் எதிரொலிக்கிறது.
- நினை
★★★★
மிகச் சிறந்ததை நான் தேர்ந்தெடுக்க இயலாது. மிகச் சிறந்தது எதுவோ அது என்னைத் தேர்ந்தெடுக்கிறது.
- ப.ப
★★★★
தன்னைக் கடந்த வாழ்க்கையில்தான் மனிதன் உண்மையில் வாழ்கிறான். அறிந்திறாத ஆண்டைக்காக அவன் உழைக்கிறான், உலகில் பிறந்திராதவர்களுக்காக சேமித்து வைக்கிறான்.
- எ.எ
★★★★
எவனொருவனின் பேச்சு தூய்மையாயிருக்கிறதோ, எவனொருவன் செருக்கையும், தற்பெருமையையும் விட்டொழித்திருக்கிறானோ அத்தகையவன் உண்மையான பெயரடைகிறான்.
- கா.ப
★★★★