இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
178
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
உன்னைப் படைத்த பேரொளியின் துன்புறுத்தும் பெருக்கத்தை யாரால் கற்பனை செய்ய முடியும்?
-நா
★★★★
ஒவ்வொரு நாளும் என் நெஞ்சத்திலிருந்து பருதி ஒளியை வாங்கி விடுகிறாய். என் வாழ்வாகிற உருவத்தில் உன் காதல் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறாய்.
-க.கொ
★★★★
பொருளை நம்ப இயலாவிட்டாலும் கூட இசையில் உண்மை இருந்து விட்டால் மனநிறைவு பெற்றிடுவாய்.
- நா
★★★★
பறவைகளுக்கு நீ பாடல்களை அளித்தாய், பறவைகளும் பாடல்களை உனக்குத் திரும்ப அளித்தன.
-க.கொ
★★★★
வாழ்வு என்பது இடைவிடாத படைப்பு. எல்லை இல்லாததில் அது தன்னை மீறி வளர்ச்சியடையும் போது அதில் உண்மை தெரிகிறது.
-ஆ
★★★★
என் அன்பே, உன்னை என் கண்களில் மறைத்து வைத்திருப்பேன்.
-நா
★★★★