இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
180
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
மாந்தனின் உண்மை உலகைப் படைத்தல் - உண்மை, அழகு இவற்றினாலான, வாழும் உலகம் அது - கலையின் பணி.
ஆ
★★★★
நண்பா, நீ இப்பொழுது தப்பிச் செல்ல முடியாது, ஏனெனில் உனது கமுக்கம் எனதும் தான்.
-நா
★★★★
நான் வந்தேன். உன் நெஞ்சம் விம்மியது. வலியும், மகிழ்ச்சியும் ஒருசேர உன்னிடம் வந்தேன்.
நீ என்னைத் தொட்டாய்; காதலில் உள்ளதிர்வுற்றாய்.
-க.கொ
★★★★
அதோ கடலையைக் கொறிக்கும் அணிலாக இருந்தால் உரிமையாக உலாவுவேன். அந்தோ, அந்தக் குன்றைத் தாண்டிச் செல்ல என் மனம் துடிக்கிறதே! அந்தக் குன்று கையை உயர்த்தி வானை அழைப்பது போலிருக்கின்றதே! அந்த ஆற்றைத் தாண்டி இயற்கை உலகைக் காணமாட்டேனா?
அ அ
★★★★
உன் கைகளை நிரப்பிப் பிரிந்து செல்லும் ஒளிக் கீற்றுதான் உன் உலகம். ஆனால் உனது துறக்கமோ எனது