பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

187


எழும்புகிறாய். பாடல்கள் பீறிட்டு எழும்போது என் நெஞ்சம் அவற்றினடியில் முழுகிப்போய்விடுகிறது.

-நா

நம் உள்ளத்திற்கு உவகை ஊட்டும் பொழுதுதான் எந்தவொரு பொருளும் நமக்கு முழுதும் உரித்தாகிறது.

சா

தான் முளைத்தெழும் பரந்த உலகிற்குத் தகுதியாகிறது புல்லின் இதழ்.

பப

அந்த ஒருவனைக் கண்டு பிடிப்பது என்பது எல்லாவற்றையும் அடைந்திருப்பதேயாகும். அதில் தான் நமது அறிதியும், உயர்ந்ததுமான உரிமை உள்ளது.

சா

என் பாடல்கள் தேனீக்களைப் போன்றவை. உன் நினைவை ஏதோவொரு நினைவு - நறுமணம் வீசும் காற்றினூடே, உனது வெட்கத்தைச் சுற்றி, மறைந்திருக்கும் ஒரு புதிர்ச் செல்வத்தைக் காணத் தொடர்கிறது.

-நா

உனது மறைந்த மெய்தொடு உணர்வு பொங்கி வழியும் என் நெஞ்சத்தை எனது உடலின் ஆழத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

-நா