இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
188
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
உனக்கும் எனக்குமிடையே உள்ள காதல் ஒரு பாடல் போல் எளிமையானது.
-தோ
★★★★
அலையில் அலைக்கழிக்கப்படும் பலரில் ஒருவனாக நான் இருந்த போதிலும் உனது அன்பினால் என்னை உயர்ந்தவனாக்கிவிட்டாய் நீ.
-நா
★★★★
எனக்காக நீ கட்டிய மல்லிகை மாலை புகழுரை போன்று என்னைச் சிலிர்க்க வைக்கிறது.
-தோ
★★★★
நம்மிடம் தன்னைக் கொடுப்பதோடு அவன் நிறைவடைந்து விடுவதில்லை. நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் ஆற்றலைப் போன்று, தானும் நமக்கு ஆற்றலை அளிக்கிறான்.
-சா
★★★★
எல்லையற்ற தன் நுழைவாயிலைத் தட்டுவதற்கான உரமளிக்கும் வேண்டுதலை துன்பம் மாந்தனுக்கு அளித்திருக்கிறது. -ஆ
★★★★
நாளை இசைக்கப்பட வேண்டிய பாடல்கள் இன்று, அரும்புகளாக உள்ளன. அவற்றின் வழி நீ நடந்து செல்வது