இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
190
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
என் தோழனே, உன் நெஞ்சின் கமுக்கத்தை உனக்குள்ளேயே மூடி மறைத்திடாதே. என்னிடம், என்னிடம் மட்டுமே கமுக்கமாக அதைக் கூறிவிடு.
-தோ
★★★★
போற்றுதலுக்குரியது என்பது ஒரு பிறந்த குழந்தையே.
-ப.ப
★★★★
பொதுவான பொருண்மைகளையும், நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியதே இந்த உலகம். அந்த உலகில் அன்பைப் பொழிந்திடவே இறைவன் பெண்ணை அனுப்பியுள்ளான்.
-ஆ
★★★★
மென்மையாகப் புன்னகை சிந்துகிறாய் நீ, மென்மையாகக் கிசுகிசுக்கிறாய் நீ. என் நெஞ்சம் அதைக் கேட்கிறது, என் காதுகளல்ல.
-தோ
★★★★
என் காதலியிடம் நான் நிலையாக அளிக்கப்பட்டுள்ளேன் என்பது மட்டும் போதுமானதன்று. அதிலிருந்து நாள்தோறும் புதிது புதிதான பரிசுகளை உருவாக்க வேண்டும்.
-நா
★★★★