இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
191
தன்னை அளித்துக் கொள்வதிலேயே அவன் மகிழ்ச்சி காண்கிறான். இறைவனுடைய படைப்பே அந்த அளிப்பாகிறது. -சா
★★★★
எல்லோரிலும் உயர்ந்த இறைவனை அறிவதே மாந்தனின் ஒரே தேடுதல். -ஆ
★★★★
'குழந்தை எதை எடுத்து வருகிறது உன்னிடம்? 'உலக முழுவதற்குமான நம்பிக்கையையும், அதிலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியையும்.' -நா
★★★★
அனைவருக்கும் அன்பின் மூலம் தன்னையே அளித்துக் கொண்டிருக்கிறான் இறைவன். -ஆ
★★★★
என் அருமைக் காதலியே, என் குரலைப் பற்றிய எண்ணமே இல்லாமல் உன்னிடம் நான் பேசிக் கொண்டிருந்தேனே. அதற்கு நீ ஏதாவது வகை வைத்தாயா? (அதில் நீ ஏதாவது பொருள் கண்டாயா?) சொல்லிவிடு, வாழ்க்கையின் வரம்புகளையெல்லாம் தாண்டி எங்கிருந்தோ ஓர் அறிவுரை கொணர்ந்தது. -நா
★★★★
என் அன்பே, பேசிடு. நீ என்ன பாடினாய் என்பதை வாய்திறந்து சொல்லிடுவாய்.