பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேண்டுதல்


நலங்கெட்ட இந்நாட்டினின்று இழிவு தரும் அச்சம் யாவுமே அகற்றிடுவாய், மங்கலம் நிரம்பியவனே! மாந்தரால் வரும் துன்பம், அரசினால் வரும் அழிவு, தீம்பு, மறலியால் மூளும் அச்சம் யாவையும் எளிய உயிரினை ஒடுக்கிடும், இப்பாறையின் சுமையை, நொறுங்கிக் குழைந்து மண்மிசை உழன்றிடும் தொல்லையை; நீடித்த இந்தத் தாழ்வினை; கணமும் உயிரை வாட்டும் மானக்கேட்டை; அகத்தையும் புறத்தையும் இறுக்கிடும் இவ் அடிமைத் தளையை; நடுங்கித் தலைதாழ்ந்து பலர் காலடியில் மாந்தன்மையை இழந்திடும் இக் கொடுமையை, மாபெரும் இழிவின் இவையை, உன் காலால் மிதித்துத் துகளாக்கிடு. மங்கலம் தரும் வைகறையில் எல்லை இல்லா வானிடையே பரவிய ஒளியினலே காற்றின் திறந்த மச்சிடையே தலை நிமிர்ந்து நின்றிடுவேன். -நைவேத்தியம்