இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
உன்னுடைய செம்மலர்கள் தங்களுடைய தகிக்கும் அமைதியில் கூறிவிடுகின்றன.
கா. ப
★★★★
"நாள்கள் ஓடுகின்றன; ஆனால் நான் உனக்காக என்றும் காத்திருப்பேன்," என்றது காதல்.
- க.கொ
★★★★
சிறிய இலைகளின் மனம் மயக்கும் அசைவில் காற்றின் கண்ணுக்குப் புலப்படாத கூடத்தை நான் காண்கிறேன் அவற்றின் மங்கிய ஒளிவீச்சில் விண்ணின் கமுக்கம் உள்ள துடிப்புகளைக் காண்கிறேன்.
- மின்
★★★★
உலகனைத்தையும் தொட்டுத் தொடரும் அளவு ஒன்றே. முற்றிலுமாக இதை உணர்பவர்கள் வெகு சிலரே.
கா. ப
★★★★
காதலின் மொழியை அதன் மெட்டுக்கேற்ப பாட
முடியும் என்று எண்ணினேன், ஆனால் அந்தப் பாட்டு என் நெஞ்சில் ஒலிக்கிறது; கண்கள் பேசவில்லையே.
கா. ப
★★★★
நண்பனே மெட்டு என்பதே இல்லாமலிருந்தால் உன்னால் அவற்றை இனம் காண இயலுமா கூறிடு.
த.ஓ
★★★★