த. கோவேந்தன்
25
விதையொன்றின் நெஞ்சத்தில் காத்திருக்கும் நம்பிக்கை ஒர் அற்புதத்தை வாக்களிக்கிறது. ஆனால் உடனே அந்த வாக்கை அது மெய்ப்பிக்க முடியாது.
- மின்
★★★★
கடல் தன் மகிழ்ச்சியை தம்பட்டமடித்துக் கொண்டிருக்கிறது. மலர்கள் உன்னை முத்தமிடத் துடித்துக் கொண்டிருக்கின்றன. என் குழந்தாய், தாய் மண்ணின் கைகளில் உன்னிடம் விண்ணகமே பிறப்பெடுக்கிறது.
-கா. ப
★★★★
கும்மிருட்டு. எனது அமைதியில் நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாய்.
காதலின் துயரமே, கண்விழித்திடு. ஏனெனில் வாயிலைத் திறந்திடும் வழியறியேன் நான், வெளியே காத்திருக்கிறேன்.
விழித்தெழு, காதலே, விழித்தெழுவாய். எனது வெற்றுக் குவளையை நிறைத்திடு. இசையின் மூச்சும் காற்றினால் இரவின் அமைதியை அசைத்திடு. -
-க. கோ
★★★★
கன்று காலிகள் தங்கள் கொட்டிலுக்குத் திரும்புகின்றன. பறவைகள் தங்கள் கூட்டிற்குத் திரும்புகின்றன. உன் கதவைத் திறந்துவிடு. நான் காத்துக் கொண்டிருக்கிறேன். -
-இ. அ
★★★★