30
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
நான் உன் கைகளைப் பற்றிக் கொள்கிறேன். உனது கரிய விழிகளில் புகுந்து கொள்கிறது என் நெஞ்சம்.
- மின்
★★★★
தேவன் தன்னுலகில் இயங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் தேவியோ நமது அடி ஆழ இருண்மையில் கண் துயில் கொண்டிருக்கிறாள்.
-எ.எ
★★★★
அடக்கிவைக்கப்பட்ட அன்பின் ஆழமான துயரமாக மலர்கின்றன இளவேனிற் காய் மலர்கள்.
கா. ப
★★★★
என்னுடைய பலமற்ற தோணியைக் கொண்டு ஆசைக் கடலைக் கடக்க நான் தவித்துத் திணறுகிறேன். என் முயற்சியும் விளையாட்டுத்தான் என்பதை மட்டும். ஐயோ, நான் மறந்தே விடுகிறேன்.
★★★★
நீ எனது நெஞ்சத்தின் மையத்தில் இருந்தாய். ஆகையினால், என் நெஞ்சம் சுற்றித் திரிந்தபோது, அவள் உன்னைக் காணவேயில்லை, எனது அன்புகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்தும் கடைசி வரை உன்னை நீயே மறைத்துக் கொண்டாய். ஏனெனில் நீ எப்பொழுதும் அவற்றிலிருந்தாய்.
- க.கொ
★★★★