இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
45
எனது பாடல்களை உனது ஊமை நெஞ்சத்தில் பொழிகிறேன்; அதே போன்று, எனது அன்பையும் உனது அன்பில் பொழிகிறேன்.
- தோ
★★★★
உன் கண்கள் கண்ட விருந்தாளியை உன் இல்லத்திற்குக் கொண்டு வராதே. உனது நெஞ்சத்தின் அழைப்பின் பேரில் அவன் உன் இல்லம் வரட்டும்.
-படை
★★★★
மண், தண்ணீர் இவற்றின் நெஞ்சத்திலிருந்து பீறிடும் குரல் "நான் காதலிக்கிறேன், நான் காதலிக்கிறேன்" என்பதே.
- செம்
★★★★
அமைதியாக இரு என் நெஞ்சமே, இந்த ஓங்கி உயர்ந்த மரங்கள் வேண்டுதல்கள் தாம்.
- ப.ப
★★★★
மொட்டுக்களை மலரச் செய்வது உன் வேலையில்லை. மொட்டை உலுக்கிடு, உதிர்த்திடு. ஆனால் அதை மலரச் செய்வது உன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.
-க.கொ
★★★★
என் மரத்தின் நிழல் வழிப்போக்கர்களுக்காக அதன் கனியோ, நான் காத்துக் கொண்டிருக்கும் அந்த ஒருவருக்காக.
- மின்
★★★★