50
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
என் குழந்தாய், உனது இனிய உடம்பில் உறக்கம் நிறைவு காண்கிறது.
-கா.ப
★★★★
மரம் தன் இலைகளை உதிர்ப்பது போல், நிலத்தில் நான் சொற்களை உதிர்க்கிறேன். வெளிவராத என் எண்ணங்கள் உனது அமைதியில் மலரட்டும்.
- மின்
★★★★
எவற்றையெல்லாம் நான் விட்டுச் செல்ல வேண்டுமோ, அவற்றையெல்லாம் நான் விட்டுவிடுகிறேன். எவற்றையெல்லாம் ஏற்க வேண்டுமோ, அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். உன்னுடன் சேர்ந்து நடை போட மட்டும் என்னை அனுமதித்திடு.
-படை
★★★★
அருகே என்கிற தடைக் கல்லின் ஊடே புகுந்தாவது உன் அன்பு என்னைக் காணட்டும்.
- மின்
★★★★
முள்களினூடே சிறிய மலரொன்று காணக்கிடைத்தது. உலகின் நம்பிக்கை மடிந்து விடவில்லை, என்று நான் உரக்கக் கூறிவிட்டேன்.
- நா
★★★★
கடலலைகளின் மேல் இரவில் மின்னுகிற வெளிச்சம்தான் நமது பெயர்கள். பின்னர் தன் கையெழுத்தை