இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
53
நிலாவே வந்து விடு, கீழே இறங்கிவிடு. என் கண்மணியின் நெற்றியில் முத்தம் பதித்திடு.
-கா.ப
★★★★
வாழ்க்கையில் என் சாதனைகள் அளித்துள்ள மகிழ்ச்சிகள் யாவற்றையும், விருந்தின் முடிவில் அன்புடன் உனக்கு ஈத்துவக்கிறேன்.
- மின்
★★★★
தான் ஓர் ஆற்றல் என்பதன் மூலம் மாந்தன் வெளிப்படுகிறதில்லை. தான் ஓர் உயிர் என்பதிலேயே வெளிப்படுகிறான்.
-படை
★★★★
கவர்ச்சியின் ஈர்ப்பு, வெறுப்பின் அவலம் என்கிற எதிர் மாறான ஆற்றல்களின் பிணைப்பே படைப்பு.
-படை
★★★★
கவிதையைப் போன்றது, சமயமும் வெறும் எண்ணமும் மட்டுமில்லை. எண்ணத்தின் வெளிப்பாடு அது.
-எ.எ
★★★★
உன் கண்ணசைப்பினால் கவிஞர்களின் இசைக் கருவியிலிருந்து எழும் பாடல்கள் யாவற்றையும் கவர்ந்திடலாம்.
- தோ
★★★★