இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
59
இடையிடையே இன்னல்களைச் சந்தித்து நம்பிக்கையைப் புதுப்பித்து முன்னேறும் மாந்தனின் வரலாறே அவனது உலகம்.
-படை
★★★★
மற்றவர்களின் நுகத்தடிக்கு எனது நெஞ்சம் வளைந்து கொடுக்காமலிருக்கட்டும்.
-எ
★★★★
அனைத்துமே உண்மைதான். உண்மையின் வெளிப்பாடுதான் பேரழகு.
- எ.எ
நீயும் நானும் இரு கரைகள். நமக்கிடையே விரிந்து கிடப்பது பேராழி. எழும்பி நின்று அதைக் கடக்க விரும்புகிறேன் நான்.
- மின்
★★★★
நம் நெஞ்சங்களில் ஒளியைப் பொழுகிறது வானம்.
-எ.சு
★★★★
உன் முகத்தின் ஈர்ப்பாற்றல் அத்தனையும் தானாகவே கிட்டியதில்லை என்பதை நான் அறிவேன். நினைவிற்கு எட்டாத ஒரு கூடலின் பின் என் கண்களில் தேங்கியிருந்த கட்டுக்கடங்கா உணர்ச்சி ஒளியை நீ கவர்ந்து கொண்டிருக்கிறாய்.
- நா
★★★★