இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
உணர்வு நிலையின் விடுதலையே உள்ளொளி வாழ்வு.
- எ.எ
★★★★
நமக்கு நாமே எல்லாமாயிருக்கும் நிலையில், உலகம் நமக்கு அத்தனைச் சிறப்பாகப் படுவதில்லை.
- எ.எ
★★★★
ஒருவருமறியாமல் இரவு மலர்களை இதழ் விரிக்கச் செய்கிறது; நன்றியை விடை பெற்றுக் கொள்ள அனுமதிக்கிறது.
-ப.ப
★★★★
தனது வரையறைகளை உண்மை விரும்புகிறது. ஏனெனில், அங்கே அது அழகினைச் சந்திக்கிறது.
- மின்
★★★★
இளந்தென்றலில்தான் இறைவனது பெரும் பேராற்றல் காணப்படுகிறது; புயல்காற்றில் காணப்படுவதில்லை.
- ப.ப
★★★★
நான் விடைபெற வேண்டிய நாளில்தான் செங்கதிர் முகில்களிலிருந்து வெளிவருகிறான். இறைவன் கடலைப் போன்று வானம் நிலத்தின் மேல் தன் பார்வையைப் பதிக்கிறது.
- எ
★★★★