64
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
மாந்தனின் வாயில் ஒவ்வொரு குழந்தையும் தனது குரலை மாறி மாறி எழுப்புகிறது. நிலைத்திருப்பது காலைப்பொழுதின் செய்தி அந்தக் குரலைப் பழுதில்லா மலேயே விட்டு வைத்துள்ளது.
- எ.எ
★★★★
எல்லைக் கோட்டைத் தொட்டதுடன் முடிவடைவதில்லை உண்மையான குறிக்கோள், எல்லையற்ற ஒரு நிறைவான நிலையைத்தான் குறிப்பிடுகிறது அது.
-மின்
★★★★
தனது அழகான நிழலின் மேலேயே மரம் தன் அன்புப் பார்வையைச் செலுத்துகிறது. ஆனால் அதன் பொருளை மரம் என்றுமே புரிந்து கொள்ள முடியாது.
- மின்
நமது கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஆற்றல் பெற்றிருப்பதே வாழ்வில் நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு.
-எ.எ
★★★★
ஒ, பெண்ணே, வாழ்வின் இசை உன் சிரிப்பில் புதைந்துள்ளது.
- ப.ப
★★★★
உயர்ந்த மாந்தர்களைக் காணும் இடமெங்கும் தானும் உயர்ந்தவனே என்பதை அறிந்து கொள்கிறான் மாந்தன்.
- எ.எ
★★★★