66
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
செங்கதிர் ஒளிபோன்று என் அன்பு உன்னை சூழ்ந்திருக்கட்டும். அதே சமயம் ஒளிமயமான விடுதலையை உனக்கு அளிக்கட்டும்.
- மின்
★★★★
ஒளியை வாரி வழங்கும் விண்மீன்களைக் காட்டிலும் மாந்தன் தனக்கு அளிக்கும் அகல் விளக்கின் ஒளியையே இறைவன் அதிகமாக விரும்புகிறான்.
-ப.ப
★★★★
உனது நினைவைக் கோருவதற்கு எனது காணிக்கைகள் தயக்கம் காட்டுகின்றன. அதன் காரணமாகவே நீ அவற்றை நினைவு கூறலாம். -
மின்
★★★★
"என் மேல் படிந்திருந்த பனித்துளியை இழந்து விட்டேனே"; என்றதாம் மலர், தன் விண்மீன்கள் யாவற்றையும் பறி கொடுத்திருந்த காலை வானிடம்.
-ப.ப
★★★★
வேனில் மாதத்தில் நீ அளித்த பாடல்களாகிய விருந்தில் என் இடத்தை நான் கண்டு கொண்டேன்.
- எ
★★★★
என்னிடம் உன் பாடல்களை நீ பாடிய நாள்களும் உண்டு. அவற்றை நான் கேட்டு மகிழ்ந்து என் நெஞ்சத்தைப் பறி கொடுத்ததும் என் நினைவில் உள்ளது.
-நா
★★★★