இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
68
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
குழந்தைகள் அமர்வதற்காகப் புழுதியை நோக்கி விரைகின்றன.
-வ.பி
அவை விளையாடுவதை இறைவன் கூர்ந்து கவனிக்கிறான்; பூசாரியை மறந்து விடுகிறான்.
-வ.பி
★★★★
பழத்தின் பணி விலைமதிக்க முடியாதது, மலரின் பணி இனிமையாதது. பணிவான பந்தியின் நிழலிலிருக்கும் இலைகளின் பணி போன்றதாக எனது பணியிருக்கட்டும்.
-ப.ப
★★★★
இறைவன் நண்பர்களைத் தேடுகிறான்; அன்பைக் கோருகிறான்.
- மின்
★★★★
இழந்த அன்பின் மூலம் வாழ்க்கை மேலும் வளம் பெறுகிறது.
-ப.ப
★★★★
குன்றினடியில் தாழ்ந்திருக்கிறது தடாகம். வளைந்து கொடுக்காத அடிவாரத்திற்கு அன்பின் கண்ணி வேண்டுகோள்
- மின்
★★★★
இறைவா, உன்னைத் தவிர அனைத்தையும் பெற்றி--