இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
70
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
இழந்தது ஆற்றலை அன்று, வாடியது வாழ்க்கையில்லை. இவைதாம் அமைதி எனப்படுவது. இழந்ததும், தேய்ந்து போனதும் அவற்றின் முழுமையே.
- எ.எ
★★★★
என்னைப் பார்த்து நானே சிரித்துக் கொள்ளும்போது, என்னை அழுத்திடும் பாரம் மென்மையாகிறது.
- மின்
★★★★
முகில்கள், காடு இவற்றின் இசையோடு கூட, உலகின் நெஞ்சத்தில் எனது பாடல்கள் அவற்றிற்குரிய இடத்தைப் பெறுகின்றன.
-தோ
★★★★
உலகம் உறங்கும் நேரத்தில் நான் உன் வாசலை அடைகிறேன். விண்மீன்கள் பேச்சற்று இருக்கின்றன. பாட நான் அஞ்சுகிறேன்.
- தோ
★★★★
உன் மூலமாக நான் விடுமுறை பெற்றுக் கொள்ள வேண்டும். காரணம், உன் கண்களின் நடனத்தில் நான் ஒளியைக் காண்பதே.
-நா
★★★★
அன்பு என்கிற உறவினர் மூலம் நமக்குப் பல தொடர்புகள் ஏற்படுகின்றன. வாழ்க்கையை நாம் சுவைப்பதே இதன் காரணம்.
-படை
★★★★