இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
71
தாமரை இலை தண்ணீரிலேயே வாழ்வது போல, நீயே என் தலைவன், நான் உனது தொண்டன்.
-க.பா
★★★★
தவறுகள் என்கிற வாய்க்கால் வழியாக உண்மை என்கிற நீரோடை பாய்ந்து செல்கிறது.
- ப.ப
★★★★
உள்ளுயிரின் விடுதலையைப் பற்றி உணர்ச்சியுடன் பாடுகிறவர்களின் எண்ணிக்கை கொஞ்சமில்லை. ஆயினும் அவர்களுடைய பெயர்கள் வரலாற்றில் இடம் பெறப் போவதில்லை.
-எ.எ
★★★★
இவற்றினுடே ஒளிவிடும் மின்மினிப் பூச்சிகள் விண்மீன்களைத் திகைக்க வைக்கின்றன.
-மின்
★★★★
பகற் பொழுதில் பல்வேறு பயணங்கள் தொடங்கி மாலைப் பொழுதின் தனிமை வரை நீ என்னை அழைத்துச் சென்றிருக்கிறாய்.
இரவின் அமைதி மூலம் அதன் பொருளை அறிந்து கொள்ள முற்படுகிறேன்.
-ப.ப
★★★★
அமைதியை இரப்பவன் உண்மையிலேயே யாராக இருக்க முடியும்? ஈகம் செய்யத் அணியமாயிருப்பவர்களால் தான் அது முடியும்.
-எ.எ
★★★★