பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


சாலையோர புல் விண்மீனை விரும்புகின்றது, உனது கனவுகள் மலர்களாக வெளிப்படுகின்றன.

- ப.ப

அரும்பை முகிழ்க்க வைக்கிறவன் அதை வெகு எளிதாகவே செய்து விடுகிறான். அதை ஒரு பார்வை பார்க்கிறான். அவ்வளவு தான். அதன் நரம்புகளில் உயிர்ப் பாற்றல் ஓடத் தொடங்கி விடுகிறது.

- க.கொ

மழையின் நிழலில் என் நெஞ்சம் அமர்ந்திருக்கிறது, உன் அன்பிற்காகக் காத்திருக்கிறது.

- எ

உன்னிடம் என்னை இழப்பதைக் காட்டிலும், கரை சேர்வது சிறப்பானதா?

- நா

வெளியெங்கும் ஒலித்திடும் உரத்த குரல்களுக் கிடையே தனித்திருக்கும் ஒரு மரத்தின் அமைதியான நெஞ்சத்தில் எனது உள்ளுயிர் இன்றிரவு தன்னை இழக்கிறது.

- மின்

என் நெஞ்சமே, உறுதி தளராமலிரு. பொழுது விடியும்.

-எ