பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


இளவேனிற் பருவம் ஒரேயடியாக மறைந்து விட்டதேயென்று வாடிப்போன மலர் பெருமூச்சு விடுகிறது.

-மின்

இந்த மரத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் இலைகள் சிறு குழந்தையின் விரல்கள் போன்று என் நெஞ்சத்தை வருடுகின்றன.

-ப.ப


வாழ்க்கை என்கிற என் தோட்டத்தில், என்றுமே சேர்க்கப்பட்டுச் சேமிக்கப்படுத்தப் படாத ஒளி, நிழல் போன்றே என் செல்வமும் இருந்திருக்கிறது.

-மின்

உனது இசைக்கலை, ஒரு போர்வாள் போல, அங்காடிச் சந்தடியில் அதனுடைய நெஞ்சத்தில் பாய்ச் சட்டும்.

-ப.ப

ஆழ்ந்த அச்சத்தில் என்னைக் காப்பாற்றுமாறு நான் இரக்கக் கூடாது. எனது விடுதலையைப் பெற எனக்குப் பொறுமை இருக்கட்டும்.

-க.கொ

என்றுமே எனதாயிருக்கிற பழம், நீ ஏற்றுக் கொண் டுள்ள பழம்தானே.

-மின்