பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


குழந்தைப் பருவத்தில் இந்த வெண்ணிற மலர்களை, மணமுள்ள இந்த மல்லிகைகளை, என் கை நிறைய அள்ளிக் கொண்ட அந்த முதல் நாளை நான் மறக்கவில்லை என்றே தோன்றுகிறது.

-வ.ம

நான் மறைந்துபோன பின்பும் கூட, என்னைப் பற்றிய நினைவுகள் உனக்குத் தோன்றிக் கொண்டிருக்கட்டும், விண்மீன் அமைதியுடன் ஞாயிற்றின் மறைவு ஒன்று சேரும் போது ஒலியற்று ஒளிருவதைப்போல.

-ப.ப

மறைவிற்குப் பின்னரும் வாழ்ந்து கொண்டிருப்பதே வாழ்வின் உண்மையானப் பொருள். தன்னிடமிருந்தே அது மேலும் மேலும் வளர்ச்சி பெற்றுக்கொண்டே இருக்கிறது.

-எ.எ

அமைதியான இருட்டின் பின்னே கண்ணுக்குத் தெரியாத விருந்தாளி நடை போடுகிறான்; என் நெஞ்சம் நடுக்கம் காண்கிறது.

-எ

ஓய்வாகிற மாலை விண்மீனை என் நெஞ்சத்தில் ஏற்றி வைத்திடு. அந்த நேரத்தில் இரவு என்னிடம் காதல் மொழி பேசட்டும்.

- ப.ப