பக்கம்:இரவும் பகலும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இரவும் பகலும் வன் திருமேனியிலே சேர்ந்த பிறகு பகைமை இன்றி வாழும் வாழ்வு பாம்புக்கும் திங்களுக்கும் கிடைத்திருக் கிறது. அப்படி இருக்க, அதனை மறந்து பழைய வாசனை யின் விளைவாக அவை அஞ்சுகின்றன. அவற்றின் பேதைமை கண்டு சிரிப்பதுபோல இறைவன் கையில் நகுதலை விளங்குகிறது. கிறார். இந்தக் கற்பனைக் காட்சியைத் திருநாவுக்கரசர் பாடு கிடந்தபாம்பு அருகுகண்டு அரிவை பேதுறக் கிடந்தபாம்பு அவளைஓர் மயில்என்று ஐயுறக் கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் எங்கவே கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே. (திருவடியிலே கிடந்த பாம்பைத் தன் அருகிலே கண்ட கங்கையாகிய மங்கை மயங்க, அந்தப் பாம்பு அவளை ஒரு மயி லென்று ஐயுற்று நடுங்க, நீர்கிடந்த சடையிலிருக்கும் குறை பாம்பைக் கண்டு ஏங்க, இவற்றையெல்லாம் கண்டு திருக்கரத்திலே கிடந்து நகுகின்ற தலையையுடைய திருக்கெடில வீரட்டானத்தில் வாழும் இறைவர் இருந்தவாறு என்னே ! கிடந்த- முன்பு அசையாது கிடந்த. அருகு கண்டு - அசைந்து தன் அருகில் வரக் கண்டு. அரிவை - பெண் ; இங்கே கங்கை. திருமேனியிலே உள்ள பாம்பைக் கண்டு இறைவி அஞ்சியதாகப் பொருள் கொள்ளலாம்; அது அவ்வளவு சிறப்புடையதன்று. பேதுற - மயங்க. ஐயுற - ஐயம் அடைய ; ஐயுற்று நடுங்க என்று கொள்ளவேண்டும். நீரையுடைய சடை ஏங்க - அச்சத்தால் எங்க.தான் கிடந்து நகும் தலை. நகுதலை - ஊன் கழிந்த தலை; கபாலம் ; திருக்கரததில் இருப்பது. மாலையாக அணிந்த தலையென் றும் சொல்லலாம். கெடிலம் என்றது திருவதிகைக் கெடில வீரட் டானத்தை. தரும புத்திரனைத் தருமன் என்றும் வீமசேனனை வீமனென்றும் முழுப் பெயரின் ஒரு பகுதியைச் சொல்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/41&oldid=1726781" இலிருந்து மீள்விக்கப்பட்டது