பக்கம்:இரவும் பகலும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இரவும் பகலும் அஞ்சி, மேலும் மேலும் நிரப்புகிறார்கள். இந்தக் காரணத் தால் செல்வமுடையவர்களும், தம் செல்வத்தின் மிகுதியை நினையாமல் அது செலவாகிவிடும் காலம் ஒன்று வருமே என்ற குறையுடையவர்களாக இருக்கிறார்கள். உண்மை யில் எத்தனைக்கு எத்தனை மிகுதியாகச் செல்வத்தைப் படைத்திருக்கிறார்களோ, அத்தனைக்கு அத்தனை மிகுதி யாக அவர்களுடைய குறைகளும் இருக்கின்றன. எடுக்க எடுக்கக் குறையாத நிதி ஒன்று அவர்களுக்குக் கிடைக்கு மானால் அவர்கள் அஞ்சமாட்டார்கள்; "எமக்கு ஒரு குறை யும் இல்லை" என்று கூறுவார்கள். ஆனால் அப்படிக் குறை விலாத நிதி அவர்களுக்குக் கிடைப்பது இல்லையே! . அப்பர் தமக்குக் குறைவிலா நிறைவாகிய பொருள் கிடைத்துவிட்டது என்கிறார். அது கிடைத்துவிட்ட பெரு மிதத்தால், "என்ன குறையுடையேன்?' என்று மகிழ்ச்சி கூர் கிறார். ஆம்; இறைவனுடைய பொற்கழல் அவருக்குக் கிடைத்துவிட்டது. பொன்னாலாகிய கழலை அணிந்த திரு வடியைப் பொற்கழல் என்பார்கள். அப்பர் இறைவன் திருவடியைத் தமக்குரியதாக்கிக் கொண்டதை, பொற்கழ லைப் பெற்றதாகச் சொல்கிறார். எல்லாப் பண்டங்களையும் எவ்விடத்திலும் எக்காலத்திலும் வாங்க நாணயங்கள் உதவுவதில்லை. பொன்னாக இருந்தால் அதை எந்த இடத் திலும் மாற்றிக்கொள்ளலாம். பொற்கழல் என்ற தொடர் கூட, எவ்விடத்திலும் எச் சமயத்திலும் பயன்படும் பொன்னைப்போன்ற திருவடி என்று நினைக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. அந்தப் பொற்கழல் புதிதாக உண்டாகவில்லை. எப் போதும் உள்ளதுதான். எங்கோ ஆயிரம் பொன் புதைய லாக இருந்தால் அதனால் நமக்கு என்ன பயன்? அப் பொருள் நம் கையில் இருக்க வேண்டும்; அப்போதுதான் நம் குறைகள் நீங்கும். நமக்கு உரியதாக இருந்து எப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/45&oldid=1726786" இலிருந்து மீள்விக்கப்பட்டது