பக்கம்:இரவும் பகலும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கிறது. என்ன குறை? 37 போது வேண்டுமானாலும் பயன்படுத்தும்படி இருப்பதால் பொருளைக் கைப் பொருள் என்று சொல்லும் வழக்கம் இதோ என் கையில் காசு இருக்கிறது. என் பெட்டி நிறையப் பொருள் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறு பவனுடைய தைரியம் மற்றவர்களுக்கு வராது. $3 அப்பர் சுவாமிகள் பொற்கழலை எங்கோ பார்த்து விட்டு, இது நமக்கு உரியது" என்று எண்ணவில்லை. இதோ என் வீட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்று சொல்வாரைப் போல, "பொற்கழல் ஈங்கு இருக்கப்பெற்றேன்' என்கிறார். ஈங்கு என்று தம் உள்ளத்தையே சுட்டுகிறார். "என் மனத்தில் இறைவன் பொற்கழல் இருக்கிறது. அதனால் எனக்கு வேண்டியன அனைத்தும் கிடைக்கும். ஒரு குறையும் இல்லை" என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார். இறைவனைப் பார்த்தே சொல்கிறார். "என் புண்ணியப் பயனெல்லாம் திரண்டு ஓருருவாக வந்த பரம் பொருளே! தூயவனே! உன் பொற்கழல் ஈங்கு என் மனத்தே இருக்கப் பெற்றேன்; ஆதலின், என்ன குறை யுடையேன்?" என்று பாடுகிறார். புண்ணியா! புனிதா! உன் பொற்கழல் ஈங்குஇருக் கப்பெற்றேன்; என்னகுறை உடையேன்? "அவன் லட்ச லட்சமாகப் பணம் சேர்த்து வைத் திருக்கிறான். அவனுக்குக் குறைச்சல் என்ன?" என்று ஒருவர் ஒரு செல்வரைப் பற்றிச் சொன்னால், கேட்பவர், "எப்படி அப்பா அவ்வளவு பணம் சேர்த்தான்?" என்று கேட்கிறார். அவர் சேர்த்த முறையை அறிந்து தாமும் அப்படிச் சேர்க்கலாம் என்ற ஆசை அவருக்கு. பணத்தைச் சேர்க்கும் முறைகள் எல்லோருக்கும் தெரிவதில்லை. உலகத்தில் பலருக்கு இன்னும் இரகசியமாகவே இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/46&oldid=1726787" இலிருந்து மீள்விக்கப்பட்டது