பக்கம்:இரவும் பகலும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் செய்கேன்! உற்றலால் கயவர் தேறார் என்னும்கட் டுரையோடு ஒத்தேன். 51 அப்பர் சுவாமிகளுக்கு இன்னும் திருப்தி உண்டாக வில்லை. மேல்நிலையில் உள்ள சான்றோர்களுக்கு, 'இன்னும் நாம் திருந்தவில்லையே!' என்ற எண்ணமே இருக்கும். கயவர்களுக்கோ, நம்மளவு பெரியவர் யார் இருக்கிறார்கள்?' என்ற இறுமாப்பு உண்டாகும். அப்பர் சுவாமிகளைப் போன்ற பெரியவர்கள் தம்மை இழித்துக்கொண்டு, "நான் பாவி. இழிந்தவன்" என்று சொல்வதுண்டு. அதனால் அவர்கள் உண்மையாகவே மிக இழிந்த நிலையில் உள்ள வர்கள் என்று கொள்ளக்கூடாது. அவர்களுக்குத் தம்மைத் தாமே சோதித்துக் கொள்ளும் அறிவு இருப்பதனால் தம்மிடம் உள்ள சிறிய குற்றத்தையும் பெரியதாகப் பாவிக்கும் உள்ளப்பான்மை உண்டாகிறது. கயவர்கள் தம் குணம் சிறிதாக இருந்தாலும் அதைப் பெரிதாகக் காண்பர்; தம் குற்றம் மலையாக இருந்தாலும் அதனைக் காணமாட்டார்கள். பெரியவர்களோ தம் குற்றம் சிறிதா யினும் அதனை மலையாக எண்ணி மனம் வருந்திக் குலைவர்; தம் குணம் எவ்வளவு பெரிதாயினும் அதனை எண்ணார். பிறர் திறத்திலும் கயவர் நிலையும் நல்லோர் நிலையும் இப் படியே வேறுபடும். கயவர் பிறர் குணங்களைக் காணாமல் குற்றத்தைப் பெரிதாகக் கண்டு குறை கூறுவர். நல்லோர் பிறர் குணத்தையே பெரிதாகக் கண்டு குற்றங்களைக் காணமாட்டார். நாவுக்கரசர் தம் குற்றத்தைப் பெரிதாகக் காண்பவர். முன்பு நடந்தவற்றை எண்ணி இரங்குகிறார். 'நான் எதற் காகப் பிறந்தேன்? எதற்காக உயிரோடு இருக்கிறேன்? இனி என்ன செய்யப் போகிறேன்?' என்று வருந்துகிறார். எற்றுளேன்? என்செய் கேன் நான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/60&oldid=1726801" இலிருந்து மீள்விக்கப்பட்டது