.52 இரவும் பகலும் கயவர்கள் துன்பத்தை அடைந்தால் தெளிவை அடைவார்கள் என்று அல்லவா சொன்னேன்? நான் துன் புற்று இப்போது அறிவு பெற்றேன் என்று சொல்ல லாமா? இன்னும் பெறவேண்டிய அறிவைப் பெற வில்லையே! இடும்பைப்பட்டேன் நான். ஆனாலும் எனக்குப் புத்தி வரவில்லையே! மனிதன் அநுபவத்தால் அறிவாளி யாகிறான். துன்பத்தை நுகர நுகரத் துன்பம் இல்லாத வழி அவனுக்குப் புலப்படுகிறது. எனக்கோ அந்த இயல்பு கூட இல்லாமல் இருக்கிறதே! இடும்பைகள் வந்தும், அவற்றாலே நான் படாத பாடுகளைப் பட்டும், ஞானம் ஏதும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லையே!' .... இடும்பையால் ஞானம் ஏதும் கற்றிலேன்.' இப்படியெல்லாம் நினைத்துக் கொள்கிறார் அப்பர். இனி நான் என் செய்வேன்! இந்நிலையை மாற்ற வழி இல்லையா? என் துன்பத்தைப் போக்கும் களைகண் எனக் குத் தெரியவில்லையே!' என்று வருந்தினார். திருக்கடவூருக்குச் சென்றிருந்தபோது இந்தத் தளர்ச் சியான நினைவு அவருக்கு உண்டாயிற்று. திருக்கடவூரில் இறைவன் மார்க்கண்டேயருக்காகக் காலனை உதைத்தான். அந்தத் தலத்திற்கு வந்ததும் அப்பர் சுவாமிகளுக்கு, நம்மையும் காலன் வந்து கைப்பற்றும் காலம் ஒன்று உண்டு' என்ற நினைவு உண்டாயிற்று. அப்போது சிறிது வலியிழந்தவரைப்போல இருந்தார். அந்த ஒரு கணத்தில் இந்த நினைவுகளெல்லாம் அவர் உள்ளத்தே முடுகின. ஒரு துணையும் எனக்கு இல்லையே! கடவூர் வீரட்டா னத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!" என்று முறை யிடுகிறார். களைகண் காணேன் கடவூர்வீ ரட்ட வீரே! .
பக்கம்:இரவும் பகலும்.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை