பக்கம்:இரவும் பகலும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi அத்தன்மைய னாய இராவணனுக்கு அருளும்கரு ணைத்திற மானஅதன் மெய்த்தன்மை அறிந்து துதிப்பதுவே மேற்கொண்டு வணங்கீனர் மெய்யுறவே* என்பதில் குறிப்பாகத் தெரிவிக்கிறார். அப்பர், இந்த உடம்பு ஐம்பொறிகளால் அலைக்கப் பெறு வதைப் பல இடங்களில் சொல்கிறார். பல காலம் உடம்பைப் பேணி அடையும் இன்பங்களைவிடச் சில காலம் சூலைநோயால் பட்ட துன்பம் மிகமிகக் கொடுமையாக இருந்தமையால் உடம்பை வெறுக்கும் நிலை இவருக்கு எளிதில் வந்துவிட்டது. தாம் சமணர் களைச் சார்ந்து காலத்தை வீண் போக்கியதையும்,உலகியல் வாழ் வில் பட்டு அலைந்ததையும் எடுத்துச் சொல்லி இரங்குகிறார். இறை வனுடைய அருட் செயல்களையும் பழைய வரலாறுகளையும் சொல்லிச் சொல்லி வியக்கிறார். அடிக்கடி தமக்கு அருள் செய்ய வேண்டுமென்றும், தமக்கு யமபயத்தைப் போக்க வேண்டு மென்றும்,தமக்குத் திருவடியை வழங்க வேண்டுமென்றும் விண் ணப்பித்துக் கொள்கிறார். இவர் கற்பளையால் புனைந்துரைக்கும் காட்சிகள் பல உண்டு. இந்தப் புத்தகத்தில் இரண்டு காட்சிகளைக் (4, 6) காணலாம். பல நூல்களைக் கற்றறிந்தவராதலின் பல ல கருத்துக்களையும் சொற்களையும் அவற்றிலிருந்து எடுத்தாளுகிறார். திருக்குறளின் சொல்லும் பொருளும் இவர் வாக்கில் இடையிடையே வந் துள்ளன. நான்காம் திருமுறையில் அப்படி வரும் இடங்களிற் சில வருமாறு: 66 'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் டீஈட்டு' என்ற திருக்குறளின் பின்னடி, 64 பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும் (4:10) "பொறிவாயில் ஐந்தவித்தான்' என்பதில் ஒலிக்கிறது. என்னும் திருக்குறட் கருத்தை, றுத்தார் புலன்ஐந்தும் (16:10)

  • பெரிய புராணம், திருநாவுக்கரசர் புராணம்,

73.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/7&oldid=1726746" இலிருந்து மீள்விக்கப்பட்டது