பக்கம்:இரவும் பகலும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணப்பம் யாருக்கும் இல்லாத அடையாளங்கள் சிவபெருமா னிடத்தில் இருக்கின்றன. மற்றவர்களெல்லாம் அழகும் உயர்வும் உடைய பொருள்களைத் தமக்கு ஆடையாகவும் அணியாகவும் இருப்பிடமாகவும் கொண்டிருப்பார்கள். சிவபெருமானோ இதற்கு மாறாக, அழகற்றனவும், அச்சத் தைத் தருவனவும், உலகத்தாரின் இகழ்ச்சிக்குரியனவு மாகியவற்றைக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இயல் பாகவே அழகும் உயர்வும் இருப்பதனால் அணியாலும் ஆடையாலும் புதிய அழகும் மதிப்பும் வரவேண்டும் என்பது இல்லை. அவன் ஏற்றுக்கொண்ட இழிந்த பொருள்கள் யாவும் அவனுடைய தொடர்பீனால் உயர்ந்த பொருள்கள் ஆகிவிடுகின்றன. இறைவன் தன் திருக்கழுத்தில்ருத்திராட்சமாலை தரித் திருக்கிறான். அவன் திருவிழியில் கருணையினால் தோன்றிய நீர்த்துளிகள் ருத்திராட்சங்கள் ஆயின. ருத்திரனுடைய கண்ணிலே தோன்றியவை என்ற பொருளுடையது ருத்திராட்சம் என்ற தொடர். கண்ணுக்கு அழகு தருவது கருணைப் பார்வை. அக் கருணையைக் காட்டுவது அதில் தோன்றிய துளிகள். அவற்றின் உருவமாகிய ருத்திராட்ச மணிகளை இறைவன் அணிந்திருப்பது அவன் கருணையையே அணியாக உடையவன் என்பதைக் காட்டுகிறது. அந்தக் கருணையுருவாகிய ருத்திராட்சத்தைச் சிவனடியார்கள் அணிந்து இன்புறுகிறார்கள். இறைவனுடைய கருணை யையே தாரகமாக உடையவர்கள் அல்லவா? ய ருத்திராட்சத்துக்குக் கண்டி என்றும் ஒரு பெயர் உண்டு. கண்டம் என்பது கழுத்துக்குப் பெயர். அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/88&oldid=1726832" இலிருந்து மீள்விக்கப்பட்டது