பக்கம்:இரவும் பகலும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘இப்போதே எழுதி வை’ வருமுன் காத்தல் எப்போதுமே நல்லது. பசிக்கும் போது அரிசி வாங்கிச் சமைக்கலாம் என்றிருப்பது தவறு; அரிசி வாங்கிச் சமைத்து வைத்திருந்தால்தான் பசிக்கு உதவும்."யமனுடைய தூதுவர்கள் என் உயிரைப் பிரித்துச் செல்வார்கள்; இந்த உடம்பை வீழ்த்தி விடுவார்கள். அதற்கு முன்பே எனக்கு அருள் செய்யவேண்டும்" என்று அப்பர் சொல்கிறார், இறைவனை நோக்கி. நான் என்ன செய்யவேண்டும்?" "உன் திருவடி ஒன்றுதான் யம பயத்தைப் போக்கும் என்று உணர்ந்து கொண்டேன். ஆதலால் அது என் நெஞ்சிலே காவலாக இருந்தால் அந்த அச்சம் இராது.' "அதை நெஞ்சில் தியானிக்கலாமே!" " 'நானாக அதனைத் தியானிக்கவேண்டும் என்று முயன் றால் போதாது. நின்னை நினைப்பதற்கும் நின் அருள் வேண்டும்.நீ உன்னை நினைப்பித்தால் நான் நினைக்கிறேன். உன் திருவடியை என் நெஞ்சிலே வைத்தால் அதனை நான் பற்றிக்கொள்ள முடியும்." "நீ இப்போது என் திருவடியை நினைந்துதானே பேசுகிறாய்?" "இப்படி நினைப்பது போதாது. மிக வேண்டியவர் களின் உருவத்தைக்கூட வேண்டும்பொழுது நினைத்தால், அது தெளிவாக மனத்தில் வருவதில்லை. ஆகவே உன் திருவடி மின்னல் தோன்றி மறைவதுபோல உள்ளத்தில் தோன்றி மறைவதில் பயன் இல்லை. எப்போதும் என் மனத்தில் நிலையாக நிற்கவேண்டும். எழுதி வைத்தது போலச் சிறிதும் சலனமின்றி இருக்கவேண்டும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/94&oldid=1726838" இலிருந்து மீள்விக்கப்பட்டது