பக்கம்:இரவு வரவில்லை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. அவளும் நானும்

விண்தொடு மலைப்பூஞ் சாரல் மேனியாள்!
விளைந்த மூங்கில் தேனடைச் சொல்லாள்!
வண்ணக் குறிஞ்சி மலரவள்! நான்மணம்!
வளைந்த அருவியும் நெய்தலும் போலுமாம்!1


நகைத்த முல்லை! நன்னீர்க் கேணி!
நளிர்புனல் ஓடை! நன்னெறி வெண்பா!
புகையும் எரியும் அவளும் நானும்!
பொன்னும் பொடியும் கலந்தது போலுமாம்!2


குவளை விழியாள்! குறுந்தொகைப் பாடல்!
குளிர்பூந் தென்றல்! குட்டைப் புதுமலர்!
அவளும் நானும் ஆறும் நீரும்!
அலர்ந்த பூவும் மதுவும் போலுமாம்!3


பாலைப் பாடல்! ஆவிரைப் புதுமலர்!
பாரதி தாசன் குடும்ப விளக்கு!
மாலைப் புறவு அவளும் நானும்!
வறண்ட பாலை மணலும் போலுமாம்!4

படரும் முழுநிலா! பசுந்தா ழம்பூ!
பண்ணோ டமைந்த நெய்தற் கலியாம்!
கடலும் கரையும் அவளும் நானும்!

கழியும் நீலமும் போலுமாம் வாழ்வே!5

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/39&oldid=1180337" இலிருந்து மீள்விக்கப்பட்டது