பக்கம்:இரவு வரவில்லை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. சொக்கிய நாள் வருமோ?


முற்றம் அறைநிறுவித்-திண்ணை
மெழுகிக் கோலமிட்டுச்
சிற்றில் அமைத்திடுவேன்;-வீதிச்
சிறுவர் என்கூட்டம்!
1


பெற்ற வளைப்போல் நான்-மரப்
பிள்ளைகா லிட்டாட்டி
உற்ற மருந்தளித்துப்-பலப்பல
உணவும் ஊட்டிடுவேன்!
2


உடல் குளிப்பாட்டிப்-பலநிற
உடை அணிபூட்டி
இடையில் தூக்கிவைப்பேன்;-சிரித்து
எடுத்தெடுத் தணைப்பேன்!
3


கூட்டாஞ் சோறாக்கிப்-பலருடன்
கூடி உண்டிடுவேன்;
வாட்டமில் மாப்பிள்ளைபெண்-கடையில்
வாங்கிய பொம்மைகளே!
4


சுத்தச் சுதந்தரத்தில்-பலருடன்
சொக்கிய நாள்வருமோ?
குத்தி வருத்துதென்னை!-இன்று

கூண்டுக் கிளிநானே!
5

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/60&oldid=1180133" இலிருந்து மீள்விக்கப்பட்டது