பக்கம்:இரவு வரவில்லை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூதறியா உள்ளத்தை யெடுத்துக் காட்டும்
சொக்குமுகம்; பல்வரிசை புன்னை மொட்டு:
மாதுளையின் பூவிதழ்கள்; பழமே மார்பு;
வளையொலிக்கும் இருகைகள் பசுமை மூங்கில்;
‘காதணியுங் கழுத்தணியும் இல்லை; ஆனால்,
கனிவுண்டு; கடமைசெய்வேன்; கொள்வீர்!’ என்றே
தூதுவிட்டாள் மைவிழியை; அடடா! அந்தச்
சுந்தரியை விரும்பாத உலகம் என்னே!
4


வறுமையினில் அழகுண்டு; வாய்மை யுண்டு;
வளமையுண்டு; வாய்ப்பேச்சில் இனிமை யுண்டு;
சிறுகுடிசைப் பெருவிருந்து செய்ய வல்ல
திறமுண்டு; பணிவோடு தன்னைக் கொண்டான்
வறுமையிலும் வளமையிலும் ஒன்றாய் என்றும்
மதித்துலகில் வாழ்கின்ற எளிய பெண்ணை
அறியாத அந்தகரை நாட்டை விட்டே

அகற்றினால் விடுதலையே அடைவோம் நாமே!
5

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/63&oldid=1180137" இலிருந்து மீள்விக்கப்பட்டது