பக்கம்:இரவு வரவில்லை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொல்லேறு தமிழ்ப்பகைவர்க் கெங்கள் அண்ணா! குளிர்விழியோன், கனிவுடையோன் எங்கள் அண்ணா! கல்லார்க்கும் கற்றவர்க்கும் புரியும் வண்ணம்
கருத்துரைக்க அரசியலில் வல்லோன் அண்ணா!
சொல்லாலும் எழுத்தாலும் தமிழர் நாட்டின்
துயர்களையக் காஞ்சிதந்த தூயோன் அண்ணா!
மல்லாரும் தோளுடையான், தமிழர் உள்ளம்
வாழ்ந்திடுவோன் எமதண்ணா! வாழ்க நீடே!
4









86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/92&oldid=1179376" இலிருந்து மீள்விக்கப்பட்டது