பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. வாழ்க்கைத் துறைகள்

ராக்கெட்டுக்கள், எதிர்ப்பு ஏவுகணைகள் (Guided missiles) இவைபற்றிய உற்பத்தி மிகவும் புதியது. இந்த உற்பத்திப்பெருக்கத்தில் பங்குகொள்ள விழையும் இளைஞர்கட்குப் பல சிறந்த எதிர்கால வாய்ப்புகள் உள்ளன. இதில் பல்வேறு வாழ்க்கைத் துறைகளும் உள்ளன. இத்துறைகள் யாவும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சியூட்டும் தன்மையுள்ளனவாக அமைந்துள்ளன. இன்றைய கிலேயில் இத்துறையில் பணியாற்றும் உண்மையான நிபுணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது; இவர்கள் யாவரும் போருக்குரிய ஏவுகணைகளைத் திட்டமிடுவதிலும் அவற்றை அமைப்பதிலுமே பங்கு கொண்டுள்ளனர். அமைதிக்கால விண்வெளித் தேட்டத்தில் (Exploration of space) இன்னும் பெரிய அளவில் முயற்சிகள் மேற் கொள்ளப்பெறவில்லை.

எதிர்ப்பு ஏவுகணைகள் மிகவும் சிக்கலான அமைப்புக் களைக் கொண்டவை. பல அறிவியற்பகுதிகளின் அறிவிய லறிஞர்கள், பொறியியல் வல்லுநர்கள் இவர்களடங்கிய ஒரு பெரிய குழுவினலேயே (Team) அவற்றைத் திட்டமிடுதல் கூடும். ஆகவே, இந்தத் தொழிலில் எந்தக் குறிப்பிட்ட பகுதி தமக்குக் கவர்ச்சியாக உள்ளது என்பதை இளைஞர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இங்குக் “காற்றுச் சட்டங்களையும்” (Air frames), ஆற்றல் கிலேயங்களையும் அமைப்பதற்குப் பொறியியல் வல்லுநர்கள் தேவை; வழி காட்டிக் கருவித்தொகுதிகளே நிறுவுவதற்கு மின்னியல் நிபுணர்கள் (Electronic experts) தேவை; எரி பொருள்களைத் தேர்ந்து தயார் செய்வதற்கு வேதியியலறிஞர்கள் வேண்டும். இவர்களைத் தவிர எல்லாவகைத்-