பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசயச் செய்திகள்

5


கோளினே வான்வெளியில் அனுப்பினர். அந்தப் பிரயாணி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு கோடியிலிருந்து பிறி தொரு கோடிக்கு விமானத்தில் பிரயாணம் செய்து முடிப்ப தற்குள் ‘ஸ்புட்னிக்’ பூமியை ஆறு தடவைகள் சுற்றி வந்து விட்டது.”

“இன்று நாம் வாழும் உலகம் மிகச் சிறிதாகி விட்டது. மிக விரைவில் இவ்வுலகிலுள்ள எல்லா இடங்களையும் ஒருசில நிமிடங்களில் அடைந்து விடலாம். இனி இவ்வுலகில் விமானங்களாலோ அன்றி ஏவுகணைகளாலோ தாக்கப்பெருத இடங்களே இரா. அந்த இடங்கள் எவ்வளவு தொலைவிலிருந்தாலும், மாபெருங் கடல்கள் அவற்றின் இடையே இருப்பினும், அவ்விடங்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்று சொல்வதற்கில்லே.”

“ஸ்புட்னிக், எக்ஸ்புளோரர், வேன்கார்டு போன்ற செயற்கைத் துணைக்கோள்களைப்பற்றிய பகட்டும் மருட் சியும் குறைந்துகொண்டு வருகின்றன என்பது உண்மைதான். பொதுமக்களுக்கு இவை பத்தாம் பசலி'களாகி வருகின்றன. அதனால்தான் செய்தித்தாள்களிலும் இதைப் பற்றிய செய்திகள் எங்கோ ஒரு மூலையில் இடம்பெறுகின்றன. ஆனால், அறிவியலறிஞர்களுக்கு ஒவ்வொரு சோதனையும் புதிய புதிய அனுபவங்களேத் தருகின்றன; புதிய புதிய உண்மைகளைக் காட்டுகின்றன. இன்று மனிதனே வான்வெளிப் பயணத்தை மேற்கொண்டு பாதுகாப்புடன் திரும்பிவிட்டான்.”

“வளி மண்டலத்திற்கு அப்பாலுள்ள வெளிப்பரப்பில் மனிதன் பறந்தபொழுதுதான் இராக்கெட்டு உந்து விசையின் திறன்களையெல்லாம் அவன் உணர்ந்து வருகின்ருன். இதிலுள்ள தத்துவ உண்மைகள் அளவிட முடியாதவை.