பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இராக்கெட்டுகள்


இதனைச் சிறிது எளிமையாக விளக்குவோம். பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் விசையே பொருள்களின் எடை (Weight) ஆகும். ஒருவரின் எடை 100 இராத்தல்களாக இருந்தால் அவர் பூமியின் மையத்தை நோக்கி 100 இராத்தல் விசை யுடன் இழுக்கப்பெறுகின்ருர். அவரும் பூமியை 100 இராத்தல் விசையுடன் இழுத்தவண்ணமிருக்கின்ருர், ஆனல் இந்த இழுப்புவிசையைச் சரியாகக் கவனித்து அறிய முடிவ தில்லை. பூமி, ஏனைய கோள்கள், சந்திரன், சூரியன் போன்ற பெரிய பொருள்கட்குப் பெரிய இழுவிசை உண்டு. இரண்டு பொருள்கட்கும் இடையே உள்ள தூரம் இரு மடங்கானால் ஈர்ப்பு ஆற்றலின் விசை ¼ மடங்கு( அஃதாவது 1/22) உள்ளது. இந்த இடைத் துாரம் 3 மடங்கு அதிகரிப்பின் கவர்ச்சி இழுப்பும் 1/9 (அஃதாவது 1/32) பங்கு ஆகும். இடைத் தூரம் அதிகரித்துக் கொண்டே சென்ருல் ஈர்ப்பு ஆற்றலின் விசையும் குறைந்து கொண்டே போகும். பூமியின் குறுக்கு விட்டம் பூமியின் நடுக்கோட்டில் (Equator) அது தென் துருவத்திலிருப்பதைவிடக் கிட்டத்தட்ட 27 மைல் அதிக மிருப்பதால், ஒரு பொருளின் எடை பூமியின் நடுக்கோட்டி லிருப்பதைவிடத் தென் துருவத்தில் அதிகமாக இருக்கும்.

கி. பி. 1687 இல் நியூட்டன் தம்முடைய புகழ் பெற்ற மூன்று இயக்கவிதிகளை (Laws of Motion) வெளியிட்டார். அவற்றுள் மூன்ருவது: “ஒவ்வோர் இயக்கத்திற்கும் (Action) அதற்குச் சமமான, எதிரான எதிரியக்கத்திற்கும் (Reaction) உண்டு” என்பது. இதைச் சிறிது விளக்குவோம். படகில் பிரயாணம் செய்பவர் படகு ஆற்றின் கரையை அடைந்ததும் அவர் படகிலிருந்து கரைக்குத் தாண்டுகின்ருர் உற்சாகமாக. அவர் தம் முன் காலின வளைத்துத் தம் உடலை முன்