பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இராக்கெட்டுகள்

1800 இல் சர். வில்லியம் கான்கிரேவ் என்பார் இங்கிலாந்தில் படைத்துறைக்குரிய இராக்கெட்டினை உருவாக்கினார். இது 5800 அடி தூரம் செல்லக்கூடியது. நெப்போலியனுடன் ஆங்கிலேயர்கள் போர் புரிந்த காலத்தில் இந்த இராக்கெட்டு பயன்படுத்தப்பெற்றது.

அதன் பிறகு சுமார் நூறாண்டு காலம்வரை இராக்கெட்டுக்களைப்பற்றி அறிவியலறிஞர்கள் தீவிரமாகச் சிந்திக்கலாயினர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நூல்களும் இத்துறையில் வெளிவரலாயின. முதலாவது உலகப்பெரும் போர் நடைபெற்ற காலத்தில் (1914-1918) அமெரிக்காவில் கிளார்க் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த டாக்டர் ராபர்ட் எச். கோடார்டு என்ற அறிவியலறிஞர் இத் துறையில் அதிகக் கவனத்தைச் செலுத்தி உழைத்து வந்தார். அதன் பிறகு சுமார் 20 ஆண்டுக் காலத்தில் இத்துறையில் மிகுதியான ஆராய்ச்சி நடைபெற்றது. இராக்கெட்டுகள் வரவரப் பெரிதாக வளர்ச்சி பெறலாயின; அவற்றின் வேகமும் அதிகரிக்கத் தொடங்கின. அவை மேலும்மேலும் வானத்தில் பறந்து சென்று வான்வெளியை ஆராய்வதற்குத் துணை புரிந்தன. என்றாவது ஒருநாள் இச்சாதனம் சந்திரனுக்கும் அதற்கப்பாலுள்ள கோள்கட்கும் மக்களை ஏற்றிச் செல்வதற்கும் பயன்படும் என்று ஒரு சில சிந்தனையாளர்கள் கூறிவந்தனர்.

கி. பி. 1939 இல் இரண்டாம் உலகப் பெரும்போர் தொடங்கியது. வான்வெளிப் பயணம்பற்றிய கனவு கீழ்த்தரமான போக்கில் செயற்படத் தொடங்கியது. இராக்கெட்டுகள் வெடிப்பொருள்களால் நிரப்பப்பெற்று நீண்ட தூரங்களுக்கு அனுப்பப்பெற்று அழிவு வேலைகட்குப் பயன்படுத்தப்பெற்றன. 46 அடி நீளமுள்ளனவும் 14