பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இராசராச சேதுபதி

ஆர்க்கும் - எவருக்கும்; காட்சி - பார்வை. கண்காட்சி இல்லா - கண் பார்வை இல்லாமல் மறைத்தல்; மலைவளத்தார் - மலைபோன்ற முலை வளமுடையார், களிப்பு - மகிழ்ச்சி.

1O Ꮾ

புதலை யிவர்முல்லைப் பூந்தொடைப் பாற்கர பூபனருள் மதலை யெனுமன் னவன்ராச ராசன் வரையனையிர் முதலை நடுவே யிழந்தனிர் கட்கடை முடிகின்றிர் வித2ல யறவே களிப்பதெவ் வாறு விளம்புமினே.

புதலை இவர் முல்லை - புதரிலே பற்றிப் படர்கின்ற முல்லை; மதலை - புதல்வன்; முதலை - தேடிய செல்வத்தை, கட்கடை - கள்ளுக் கடை; விதலை - நடுக்கம்; களிப்பது - மகிழ்ச்சியுறுவது; விளம்புமின் - சொல்லுவீர்; முதல் - தனம், முலை; நடுவே இழந்தனிர் - மார்பினின் நடுவே விடுத்தீர்; கட்கடை - கண்ணின் கதவு; இமை. இமைகளை முடி நின்றீர் என்றது கண்புதைத்தமையைச் சுட்டியவாறாம்.

107

சூரர் தொழுகின்ற சீராச ராசன் றெடரியன் னிர் சேரர் கொடியையுங் தென்னர் கொடியையுஞ் சென்னிவழி வீரர் கொடிமறைத் தோங்குதல் காட்டினிர் வெல்கொடியைப் பார வடமலை வைத்ததுங் காட்டுவல் பார்த்திருமே.

சூரர் - பெருவலிமை பெற்ற வீரர்; தொடரி - சேது நாட்டுள்ள தோர் ஊர்; சேரர் கொடி - வில், புருவம்; தென்னர்கொடி - பாண்டியர்கொடி மீன், கண், சென்னிவழி வீரர்கொடி - சோழர்வழிவந்த வீரர்கொடி புலி; சேர பாண்டியர் கொடிகளைச் சோழர்கொடி மறைத்துச் சிறந்தோங்கு தல். வெல்கொடி - சோழர்கொடியாகிய புலிக்கொடி. பாரவடமலை - பெரிய இமயமலை; சோழர் கொடி - புலி, புலிக்கு ஒரு பெயர் புண்டரீகம்; புண்டரீகம் என்பது தாமரையையும் குறிக்கும். புண்டரீகம் போன்ற கை. அப் புண்டரீகத்தை வடமலை வைத்ததும் காட்டுவன் என்றது தான் மலை போன்றவற்றில் கைவைத்தலைக் குறித்தது. யான் உம் முலையில் கைவைத்தலையும் பார்த்திரும் என்றவாறு.